செந்தமிழ்சிற்பிகள்

மூதறிஞர் இராஜாஜி (1878 - 1972)

மூதறிஞர் இராஜாஜி (1878 - 1972)

அறிமுகம்
சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி இந்திய வழக்கறிஞர், விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, மற்றும் எழுத்தாளர் ஆவார்.சென்னை மாகாண முதல்வர், சென்னை மாநில முதலமைச்சர், மேற்கு வங்க ஆளுநர், இந்திய ஒன்றியத்தின் உட்துறை அமைச்சர் போன்ற பல பதவிகளிலும் பணியாற்றியுள்ளார்.பாரத ரத்னா விருதைப் பெற்ற முதல் இந்தியர்களில் ஒருவர். பிற்காலத்தில் சவகர்லால் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக 1959இல் சுதந்திராக் கட்சியது தொடங்கினார். இக்கட்சியுடன் கூட்டணி அமைத்து 1967இல் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்த போதும் பெரியார் ஈ. வே. இராமசாமியுடன் தமது கடைசிக் காலம் வரையில் நட்பு பாராட்டியவர். அணுவாற்றல் போர்க்கருவிகளைக் குறைக்க போராடியவர்.கிருட்டிணகிரி மாவட்டத்தில் (பழைய சேலம் மாவட்டத்தின்) ஓசூருக்கு அருகில் உள்ள தொரப்பள்ளி கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தை சக்கரவர்த்தி வெங்கடார்யா தாயார் சிங்காரம்மா ஆவார்.ராஜாஜியின் மகள் லட்சுமி, மகாத்மா காந்தியின் நான்காவது மகன் தேவதாஸ் காந்தியை மணந்தவர். இவரது ஒரே மகன் சி. ஆர். நரசிம்மன் இந்திய அரசியல்வாதி ஆவார்.

தமிழ் மற்றும் சமுதாயப் பணி
ராஜாஜி தமது எழுத்தாற்றலால் ஆங்கில இலக்கியத்திற்கு சிறப்பாக பங்களித்துள்ளார். தமிழிலும் ராமாயணம் மற்றும் மகாபாரதம் காவியங்களை மொழிபெயர்த்துள்ளார். இவர் கல்கி மற்றும் ரசிகமணி டி.கே.சியுடன் இணைந்து குற்றாலத்தில் இலக்கிய ஆய்வுகள் நடத்தினார். புகழ்பெற்ற கர்நாடக இசைப்பாடலான "குறை ஒன்றும் இல்லை, மறை மூர்த்தி கண்ணா" இவர் இயற்றிய பாடலே..

படைப்புகள்
தமிழில் முடியுமா
திண்ணை ரசாயனம்
சக்கரவர்த்தித் திருமகன்
வியாசர் விருந்து
கண்ணன் காட்டிய வழி
பஜகோவிந்தம்
கைவிளக்கு
உபநிஷதப் பலகணி
ரகுபதி ராகவ
முதல் மூவர் (மீ.ப.சோமுவுடன்)
திருமூலர் தவமொழி (மீ.ப.சோமுவுடன்)
மெய்ப்பொருள்
பக்திநெறி
ஆத்ம சிந்தனை
ஸோக்ரதர்
திண்ணை இரசாயனம்
பிள்ளையார் காப்பாற்றினார்
ஆற்றின் மோகம்
வள்ளுவர் வாசகம்
ராமகிருஷ்ண உபநிஷதம்
வேதாந்த தீபம்

விருதுகள் /சிறப்புகள்
பாரத ரத்னா விருது, 1954
சாகித்திய அகாதமி விருது, 1958 - சக்கரவர்த்தித் திருமகன் (இராமாயணம் - உரைநடையில்)